உயர்ந்தவரே உன்னதரே

 

உயர்ந்தவரே உன்னதரே

உயரமும் உன்னதமானவரே- 2

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

இயேசுவே  எங்கள் ராஜனே - 2

 

     ஆராதனை உம் ஒருவருக்கே

     சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே - 2

 

உந்தனின் பலிபீட அக்கினியால்

என் பாவம்  நீங்கிட சுத்தம் செய்தீர் - 2

உம்  நேச அக்கினி எனை  நிரப்ப

என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் – 2

 

உம் சர்வ வல்லமையால் மூடுகிறீர்

பிரசன்னத்தால் என்னை நிரப்புகிறீர்

சேராபீன் தூதரோடு சேர்ந்து நானும்

ஓயாமல்  உம்மை ஆராதிப்பேன் – 2

 

யாரை அனுப்புவேன் யார் தான் போவார்

உரைக்கும் உம் சத்தம் கேட்டிடுதே

அடியேனை  அனுப்பிடும் உம் சேவைக்காய்

அர்பணித்தே உம்மை ஆராதிப்பேன்